இன்றைய உலகக்கோப்பை தொடரில் 34 லீக் போட்டியில் இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தை நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுல் 48, ரோகித் சர்மா 18 ரன்களில் வெளியேறினார். இதன் பின் களமிறங்கிய விராட் கோலி 72 ரன்கள் குவித்தார். இதன் பின் விஜய் சங்கர் (17), கேதர் ஜாதவ் (7), ஹர்திக் பாண்டியா (46), ஷமி (0), குல்திப் யாதவ் (0), தோனி (56) ரன்கள் குவித்துள்ளனர். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 268 ரன்கள் குவித்தனர்.

269 ரன்கள் அடித்தால் வெற்றி என்று களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் கெய்ல் மற்றும்
சுனில் அம்ப்ரிஸ் களமிறங்கினர்.இதில் முகமது ஷமி வீசிய பந்தில் கிறிஸ் கெயில் 6 ரன்களுடன் வெளியேறினார். இதன் பின் களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்கள் அடித்து முகமது ஷமி ஓவரிலே விக்கெட் பறிக்கொடுத்தார். இதன் பின் களமிறங்கிய வெஸ்ட இண்டீஸ் அணி வீரர்கள் இநாதிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ச்சியாக அனைத்து விக்கெட்களையும் இழந்தனர்.

இதில் சுனில் அம்ரிஸ் (31), நிக்கோலஸ் பூரன் (28), சிம்ரான் ஹெட்மியர் (18), ஜேசன் ஹோல்டர் (6), கார்லோஸ் பிராத்வைட் (1), ஆலன் (0), ஓஷேன் தாமஸ் (6), கெமர் ரோச்(14), ஷெல்டன் கோட்ரெல் (10) ரன்களில் வெளியேறினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில்143 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here