மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.இந்த வெற்றிக்கு காரணம் இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சுதான்.

இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் முகமது ஷாமி 4 விக்கெட்டையும் ,பும்ரா,சாஹல் இருவரும் தலா இரு விக்கெட்டையும் பறித்தனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் மூன்று வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர்.இந்த வருடம் நடந்த ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டை வீழ்த்தி  வீரர்களின் பட்டியலில் நியூஸிலாந்து அணியை சார்ந்த ட்ரெண்ட் போல்ட் 30 விக்கெட்டை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார் .மற்றொரு நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் 29 விக்கெட்டை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மூன்றாம்  இடத்தில் 28 விக்கெட்டை  வீழ்த்திய  ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் உள்ளார்.அடுத்த மூன்று இடத்தில் இந்திய அணியை சார்ந்த  முகமது ஷாமி , புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் உள்ளனர். முகமது ஷாமிக் 25 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 24 விக்கெட்டுகளும்,யுஸ்வேந்திர சாஹல் 24 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here