ஊக்க மருந்து உட்கொண்டதற்காக இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷெரனை நான்கு ஆண்டுகள் தடைசெய்துள்ளது உலக தடகள ஊக்கமருந்து தடுப்பு பிரிவு.

இந்தியாவின் தடகள வீராங்கனை நிர்மலா, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற போட்டியின்போது ஊக்கமருந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த தடகள ஒருங்கிணைப்பு அமைப்பு, நிர்மலாவின் மீது சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் நிர்மலா ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானதை அடுத்து, இவரை நான்கு ஆண்டுகள் தடை செய்துள்ளது. |

இவர் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியின் போது பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 4×400 மீட்டர் ஓட்டப்பந்தயம் இரண்டிலும் தங்க பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இவர் பெற்ற அனைத்து பதக்கங்களும் பறிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here