இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  விளையாடி வருகிறது.நேற்று பெர்த்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி,ஆஸ்திரேலிய அணியும் மோதியது.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

ஆஸ்திரேலிய அணியில் பிளாக் கோவர்ஸ் வீரர் 15-வதுமற்றும் 60-வது நிமிடத்திலும் , ஜெர்மி ஹாய்வார்ட் 20-வது மற்றும் 59-வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர் .

இந்திய அணி கடைசி வரை போராடி கோல் அடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது .மேலும் இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்க வில்லை.இப்போட்டியில் தோற்றதன் மூலம் முதல் தோல்வி தழுவி உள்ளது. இந்த இரு அணிகள் இடையிலான கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here