தென் கொரிய சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினர். நேற்று முன்தினம்  ஜின்சியானில் நடந்த முதல் போட்டியில்  ஆட்டம் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும்  இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய கேப்டன் ராணி ராம்பால், நவ்ஜோத் கௌர்  கோல் அடித்து இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி போட்டியில் தென் கொரியா அணி 4-0  என்ற கோல் கணக்கில் இந்தியாவைத் தோற்கடித்தது.இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here