தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அண 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

இதை தொடர்ந்து பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் குக்வின்டன் டி காக் தொடக்க வீரராக களமிறங்கிய அரை சதம் விளாசி 52 ரன்கள் எடுத்தார்.

அரைசதம் அடித்ததன் மூலம் சர்வேதேச டி20 போட்டிகளில் மூன்றாவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் 28-வது முறையாக அரைசதம் அடித்துள்ளார். மேலும் முதல் முறையாக கேப்டனாக சர்வேதேச டி20 போட்டியில் அரைசதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here