இந்தியாவுக்கு சுற்று பயணம் செய்து தென்னாபிரிக்கா அணி, 3டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று 2-வது போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Image

முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியின் தொடக்க  வீரர்களாக ரீசா , டி காக், களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே ரீசா 6 ரன்களில் வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த குவின்டன் டி காக் அரைசதம் விளாசி 52 ரன்கள் எடுத்தார்.

பின்னர் இறங்கிய பவுமா அரைசதம் அடிக்கமுடியாமல் 49 ரன்னில் வெளியேறினர். இதைத்தொடர்ந்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.

Image

இறுதியாக தென்னாபிரிக்கா அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிபட்சமாக குவின்டன் டி காக் 52, பவுமா 49 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில், தீபக் சாஹர் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இதை தொடர்ந்து, இந்திய அணி 150 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here