இந்தியாவுக்கு சுற்று பயணம் செய்து தென்னாபிரிக்கா அணி, 3-டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று 2-வது போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசியது.

Image

முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேற பிறகு கேப்டன் கோலி களமிறங்கினார்.

ஷிகர் தவான், கோலி இருவரும் கூட்டணியில் இணைந்து அணியின்எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த ஷிகர் தவான் 40 ரன்னில் வெளியேற இதையடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 5  ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

Image

இதையடுத்து அதிரடியாகவும் , நிதானமாக விளையாடி வந்த கேப்டன் கோலி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இந்திய அணி இறுதியாக 19 ஒவரில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கேப்டன் கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here