இந்தியாவில் சுற்று பயணம் செய்து தென்னாபிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று மொஹாலியில் நடைபெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முதலில் இறங்கிய தென்னா பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் பறிகொடுத்து 149 ரன்கள் எடுத்தது.

இதை தொடர்ந்து இறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டை பறிகொடுத்து 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

இப்போட்டியில் கோலி 52 பந்தில் 72 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரி , 3 சிக்ஸர் அடங்கும்.கோலி 72 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வேதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

இதற்கு முன் ரோஹித் சர்மா 2434 ரன்களுடன் முதல் இடத்தில் இருந்தார்.தற்போது கோலி 2440 ரன்கள் அடித்து ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி கோலி முதல் இடத்தை தட்டி பறித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here