இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அணி, 3 டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாட உள்ளது. மொத்தம்  3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டியானது, டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்கான பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அதில் முதல் போட்டி டிசம்பர் 06-ம் தேதி மும்பையிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 8-ம் தேதி திருவனந்தபுரத்திலும், மூன்றாவது போட்டி டிசம்பர் 11-ம் தேதி ஹைதராபாத்திலும் நடக்க இருந்தது.

ஆனால், டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. எனவே மும்பையில் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது என மும்பை போலீசார் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து, முதல் டி-20 போட்டி மும்பைக்கு பதில் ஹைதராபாத்திலும், மூன்றாம் போட்டி ஹைதராபாத்துக்கு பதில் மும்பையிலும் நடைபெற உள்ளது. இரண்டாம் போட்டி அறிவித்தபடியே திருவனந்தபுரத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here