இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய அணி, 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் விளையாட உள்ளது. இதில் மொத்தம் மூன்று போட்டிகளை கொண்டுள்ள டி-20 தொடர், டிசம்பர் 6ஆம் தேதி மும்பையில் நடக்கவுள்ள முதல் போட்டி, ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், ஹைதராபாத்தில் நடக்கவுள்ள இறுதி போட்டி, மும்பையில் நடக்கவுள்ளது. அறிவித்தபடியே இரண்டாம் போட்டி, திருவனந்தபுரத்தில் நடைபெறும் என பிசிசிஐ கூறியுள்ளது.

தற்பொழுது, இந்த டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடும் வீரர்களின் பட்டியலை மேற்கிந்திய அணி அறிவித்துள்ளது. இதில், நடக்கவுள்ள இரண்டு தொடர்களிலும் மேற்கிந்திய அணியின் கேப்டனாக கியேரன் பொல்லார்ட் இருந்து, அணியை வழிநடத்த உள்ளார்.

Image result for பொல்லார்ட்"

ஒருநாள் போட்டியில் ஆடும் வீரர்கள்:

சுனில் அம்பரீஷ், ஷாய் ஹோப், கேரி பிர்ரே, ரோஸ்டன் சேஸ், அல்ஜாரி ஜோசப், கியேரன் பொல்லார்ட் (கேப்டன்) ஷெல்டன் கோற்றல், பிராண்டன் கிங், ஷிம்ரோன் ஹட்மேர், ஏவின் லெவிஸ், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன், ரோமரியோ ஷெப்பர்ட், கீமோ பால், ஹேடன் வால்ஷ்.

டி-20 போட்டியில் ஆடும் வீரர்கள்:

கியேரன் பொல்லார்ட் (கேப்டன்), ஏவின் லெவிஸ், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன், பாபியன் ஆலன், ஹேடன் வால்ஷ், கீமோ பால், டேனிஷ் ராம்டின், ஷேர்பேன் ருதர்போர்ட், கேரி பிர்ரே, கேஷ்ரிக் வில்லியம்ஸ், டேனிஷ் ராம்டின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here