வெஸ்ட்இண்டீஸ், பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டப்லினில் நேற்று  நடந்த 6–வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியும் –பங்களாதேஷ் அணியும்  மோதியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி  50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 292 ரன்கள் குவித்தனர்.

அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக பால் ஸ்டிர்லிங்  141 பந்தில் ,8 பவுண்டரி , 4 சிக்ஸர் உடன் 130 ரன்னும் , கேப்டன் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்  106 பந்தில் ,7 பவுண்டரி , 2 சிக்ஸர் உடன் 94 ரன்னும், எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 43 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 76 ரன்னும் ,தமீம் இக்பால் 57 ரன்னும்  சேர்த்தனர்.இந்நிலையில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது பங்களாதேஷ் அணி.

நாளை  நடைபெறும் இறுதி  போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் –பங்களாதேஷ் அணியும் மோதுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here