வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்வாரியம் நடித்தும் கரீபியன் பிரிமீயர்  கிரிக்கெட் லீக் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தேர்வாகி யுள்ளார். மேலும் வெளிநாட்டில் நடக்கும் லீக்கில் விளையாட தேர்வாகி உள்ள முதல் வீரர் என்ற பெருமையும் பெற்று உள்ளார்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் டி 20 தொடரை போல ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.இந்த தொடரில் இந்திய வீரர்கள் யாரும் விளையாடியதும்  இல்லை மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியும் தரவில்லை.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரீபியன் பிரிமீயர்  கிரிக்கெட் லீக் தொடரில் முன்னாள்  இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் இடம் பிடித்து உள்ளார்.

கரீபியன் பிரிமீயர் தொடரில்  இருபது நாட்டை சார்ந்த 536 வீரர்களின் பட்டியலில் இர்பான் பதான் இடம் பெற்று உள்ளார்.இந்த தொடரில் 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளது.எந்த அணி இர்பான் பதானை ஏலத்தில் எடுப்பார்கள் என தெரியவில்லை.

அப்படி எதாவது ஒரு அணியில் ஏலத்தில் எடுத்தால் கரீபியன் பிரிமீயர் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை அடைவார்.மேலும் கரீபியன் பிரிமீயர் தொடர் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here