2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கேப்டன் பொறுப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்படும் என தொடர்ந்து வதந்திகள் பரவி வந்தன.

அதேபோல் அஸ்வின் டெல்லி கேப்பிடல் அணிக்கு செல்ல இருக்கிறார் என்ற வதந்திகளும் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மற்றொரு உரிமையாளரான நெஸ் வாடியா, அடுத்த சீசனிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அஸ்வின் தொடர்ந்து ஆடுவார் கேப்டனாக இருப்பார் என கூறியுள்ளார்.

மேலும் அஸ்வின் குறித்து பேசிய அவர், “இந்திய அணிக்கு அஸ்வின் மறுக்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார். அதேபோல் பஞ்சாப் அணிக்கும் மறுக்க முடியாத சொத்து” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here