இரண்டாம் நாள் முடிவில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்தியா 493/6 எடுத்து, 343 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று காலை திடீரென முதல் இன்னிங்சை கேப்டன் விராட்கோலி டிக்ளேர் செய்தார்.

இதனை அடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.

வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக மூத்த வீரர் ரஹீம் 64 ரன்கள், மெய்தி ஹாசன் 38 ரன்கள் மற்றும் லிட்டன் தாஸ் 35 ரன்கள் எடுக்க, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது. இரட்டை சதம் கண்ட மயங்க் அகர்வால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here