ரஷியாவில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான 11-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 54 கிலோ எடை பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை ஜமுனா போரா பங்கேற்றார். இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்ஜீரியாவை சேர்ந்த ஓய்டாட் என்பவரை எதிர்கொண்டார்.

துவக்கத்தில் சற்று தடுமாறி வந்த ஜமுனா அடுத்தடுத்த சுற்றுகளில் எதிரியின் பலத்தை புரிந்து கொண்டு சிறப்பாக ஆடி, 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஏற்கனவே 51 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here