2019 உலகக்கோப்பை தொடர் மே 30 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 45 லீக் போட்டியில் 32 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசீலாந்து ஆகிய அணிகள் தற்போதே அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் இங்கிலாந்து அணி மற்றும் ஜோஸ் பட்லரை பாராட்டியுள்ளார். இவர் ஜோஸ் பட்லரை “அடுத்த எம்.எஸ். தோனி” என்றும் புகழ்ந்துள்ளார்.

“ஜோஸ் நம்பமுடியாத வீரர். அவர் பேட் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் உலக கிரிக்கெட்டின் புதிய தோனி. அவர் நம்பமுடியாத விளையாட்டு வீரர் மற்றும் ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைக்ககூடியவர்” என்றார் ஜஸ்டின் லாங்கர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here