இங்கிலாந்தில் கடந்த 14-ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் கபில் தேவ் சாதனையை முறியடித்து உள்ளார்.1983-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கபில்தேவ் 175ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

இப்போட்டியில் இந்திய அணி 9 ரன்னிற்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறி கொண்டு இருந்தது. அப்போது களமிறங்கிய கபில் தேவ் இந்த சாதனையை நிகழ்த்தினார் .

இந்த சாதனையை செய்யும்போது கபில் தேவ்விற்கு வயது24. குறைந்த வயதில் இங்கிலாந்தில் 150 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கபில் தேவ் இடம் பிடித்தார். இந்நிலையில் தற்போது கபில் தேவ் சாதனையை பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் முறியடித்து உள்ளார்.

இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. கடந்த 14-ம் தேதி நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியில் இமாம்-உல்-ஹக் 131 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்ஸர் என 151 ரன்கள் குவித்தார்.

இமாம்-உல்-ஹக் வயது 23. குறைந்த வயதில் இங்கிலாந்தில் 150 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி உள்ளார்.மேலும் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

முதல் ஒரு நாள் போட்டியில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here