உலக கோப்பை போட்டி மே 30-ம் தேதி நடைபெற உள்ளது.அனைத்து நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து உள்ளனர்.மேலும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  உலக கோப்பையில் பயிற்சி போட்டி வருகிற 24-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாள் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்,இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

25-ம் தேதி நடைபெறும் இரண்டாவது நாள் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன.இந்த பயிற்சி போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி 22-ம் தேதி இங்கிலாந்திற்கு செல்ல உள்ளனர்.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில்  கேதர் ஜாதவ் இடம் பெற்று உள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் குணமாக வில்லை.மே 22-ம் தேதிக்குள் குணமாகவில்லை என்றால் கேதார் ஜாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் வேறு ஒரு வீரர்  யாராவது சேர்க்கப்படுவார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here