கிரிக்கெட் மட்டுமின்றி, இதர துறைகளிலும் ட்ரண்டாகி வருபவர், விராட் கோலி. இவர் தற்பொழுது பிளிப்கார்ட் நிறுவனத்தின் விளம்பர படத்தில், போலீஸ் கெட்டப் போட்டு கலக்கி வந்தார்.

இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி, 3டி-20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் நடைபெறவிருந்தது. மழை காரணமாக அந்த போட்டி ரத்தானது. இரண்டாம் டி20 போட்டியானது, நாளை மோகாலியில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இவர் நடித்த அந்த விளம்பரப் படமானது, பிளிப்கார்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. தற்பொழுது இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்களிடமும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here