இன்றைய உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதுகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மாலை 6 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய நியூசீலாந்து அணியின் தொடக்க வீரர்களான முன்ரோ மற்றும் குப்தில் தனது முதல் பந்திலே விக்கெட் இழந்தனர். முதல் ஓவரிலே 2 விக்கெட்களை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் சுருண்டது நியூசீலாந்து அணி. தற்போது வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் களத்தில் விளையாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here