உலக குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த மஞ்சு ராணி.

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 11ஆவது மகளிர் உலகக் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த மஞ்சு ராணி, காலிறுதி சுற்றில் வட கொரிய நாட்டைச் சேர்ந்த கிம் ஹயாங் மி-யை எதிர்த்து ஆடினார்.

துவக்கத்தில் சற்று தடுமாறிய  மஞ்சு ராணி பின்னர் ஆதிக்கம் செலுத்தி 4-1 என்ற கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் ஒரு பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here