ரஷ்யாவில் நடைபெற்று முடிந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 11 வது சீசனில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று வருகின்றன.

இதில் நேற்று நடைபெற்ற 48 கிலோ எடையை பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, ரஷ்ய வீராங்கனையை எதிர்கொண்டார். இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை எதிர்பார்த்த அளவிற்கு இறுதிப்போட்டியில் செயல்படவில்லை.

ரஷ்ய வீராங்கனையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவினார். 1-4 என  புள்ளிகள் பெற்று வெளியேறினார். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததால் இவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இருப்பினும், உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் மேரி கோம் மட்டுமே இறுதிப்போட்டி வரை முன்னேறி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here