பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இம்மாதம் 26முதல் ஜூன் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இப்போட்டியில் முன்னணி வீராங்கனை, முன்னாள் பிரஞ்ச் ஓபன் சாம்பியன் மரியா ஷரபோவா கலந்து கொள்ளவதாக இருந்தது.

போட்டி தொடங்க இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் மரியா ஷரபோவா தோள்பட்டையில் ஏற்பட்ட  காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது போன்ற  பிரச்சனை காரணமாக ஜனவரி மாதம் நடைபெற்ற செயின்ட் பீட்டர்   ஸ்பர்க் ஓபன் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்தார். காயத்தில் இருந்து விடுபட்டு விளையாட தயாராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த காயம், வலி வந்ததால் போட்டியில் இருந்து விலகி விட்டார்.

உலக தரவரிசையில் ஒருகாலத்தில் முதலிடத்தில் இருந்தவர் இதுபோன்று தொடர்ந்து விளையாடாமல் இருந்ததால் 35-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here