இந்தியா , தென்னாபிரிக்கா இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினதில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவில் விக்கெட்டை இழக்காமல் 202 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 389 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கொடுத்து விளையாடி வருகிறது.

இதில் அதிகபட்சமாக, இந்திய அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 204 பந்தில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர் உடன் சதம் அடித்தார். இதை தொடர்ந்து விளையாடிய மாயங்க் அகர்வால் 358 பந்தில் 22 பவுண்டரி, 5 சிக்ஸர் என இரட்டை சதம் அடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here