ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் தொடர்களில் அதிக எண்ணிக்கையில் ஒரு சீசனில் கோல் அடிக்கும் வீரருக்கு அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் யூரோப்பியன் தங்க ஷூ வழங்கப்பட்டு வருகிறது.

லா லிகாவில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி கடந்த 2018-19 சீசனில் 34 கோல்கள் அடித்து முதல் இடம் பிடித்தார். இதனால், அவருக்கு இன்று நடைபெற்ற விழாவில் தங்க ஷூ வழங்கப்பட்டது. இதன் மூலம், மெஸ்சி 6வது முறையாக தங்க ஷூ விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக மூன்று முறை வென்றுள்ளார்.

இவருக்கு எதிர் வீரராக கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒட்டுமொத்தமாக நான்கு முறை தங்க ஷூவை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here