59 வது தேசிய தடகள போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கனிமொழி 14.05 விநாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் ரயில்வே சார்பில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பங்கேற்ற மற்றுமொரு தமிழக வீராங்கனை ஆர் நித்தியா இலக்கை 14.15 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் தட்டிச்சென்றார். போட்டியில் தமிழக வீராங்கனைகள் அசத்தி வருவதால் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here