இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி, 3டி-20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் நடைபெறவிருந்தது. மழை காரணமாக அந்த போட்டி ரத்தானது. இரண்டாம் டி20 போட்டியானது, நாளை மோகாலியில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர், இந்திய அணியின் பேட்டிங் முறையை மாற்ற வேண்டும் என கூறினார். மேலும் அவர் வீரர்கள் அனைவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆட வேண்டும். போட்டிக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினால் எளிதில் வெற்றி காண முடியும் என்றும் கூறினார்.

மேலும் இவர் ரிஷப் பந்த் அதைப் பற்றி கூறியுள்ளார் அதில், அவர் அனைத்து வகையான ஷாட்களையும் ஆட முயற்சிக்க வேண்டும். மேலும் அவர் ஆட்டத்திற்கு ஒரு திட்டம் வகுத்து அதனை கடைபிடிக்க வேண்டும். இவற்றினை செய்தாலே அவர் அணியின் சிறப்பான வீரராக மாறிடுவார் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here