Kane Williamson scored his second century in this worldcup

இன்றைய இரண்டாவது உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதுகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மாலை 6 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி நியூசீலாந்து அணி முதலில் களமிங்கியது. இதில் தொடக்கத்தில் களமிறங்கிய குப்தில் மற்றும் முன்ரோ தனது முதல் பந்திலே தனது விக்கெட்களை இழந்தனர். இதனால் நியூசீலாந்து பெரும் சிக்கலை சந்தித்தது. இதன் பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெயலர் நிதானமாக விளையாடி வந்தனர். இருவரும் தனது அரைசதத்தை நிறைவு செய்தனர்.

Ross Taylor and Kane Williamson

இந்நிலையில் ரோஸ் டெய்லர்  95 பந்துகளில் 69 ரன்கள் அடித்து தனது விக்கெட் இழந்தார். இதன் பின் டாம் லதாம் களமிறங்கினார். கேன் வில்லியம்சன் 124 பந்துகளில் 103 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 பவுண்டரிகள் விளாசியுள்ளார். வில்லியம்சன் இந்த உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here