பிரபல கால்பந்து வீரரான பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மர் ஜூனியர், பிரேசில் நாட்டிற்காக 100ஆவது சர்வதேச கால்பந்து போட்டியை ஆட இருக்கிறார்.

9 ஆண்டுகளாக பிரேசில் சர்வதேச அணியில் ஆடிவரும் இவர் பெரிய அளவில் கோப்பைகளை வெல்லவில்லை என்றாலும், அணிக்காக சிறப்பாக ஆடியிருக்கிறார். இதுவரை ஆடிய 99 போட்டிகளில் 61 கோல்கள் மற்றும் 49 அசிஸ்ட் என தன்னால் முடிந்தவற்றை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

அடிக்கடி காயம் காரணமாக இவர் அணியில் இடம்பெறாமல் போவதால் ரசிகர்களால் பெரிதும் கிண்டல் செய்யப்பட்டும், கடுமையாக திட்டப்பட்டும் வருகிறார்.

இது குறித்து பேசிய நெய்மர், “மக்கள் என்னை திட்டிக் கொண்டே இருப்பதால் என்னால் வளர முடிகிறது. பல சாதனைகளை செய்து முடிக்க முடிகிறது” என மிகவும் நம்பிக்கையுடன் பேட்டியளித்தார்.

உலகிலேயே மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். கடந்த 2017-ம் ஆண்டு பார்சிலோனா அணியிலிருந்து பாரிஸ் செயின்ட் ஜேர்மன் அணிக்கு 200 மில்லியன் டாலர்கள் கொடுத்து இவர் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here