இந்த உலககோப்பை தொடரின் 29வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கியது நியூசீலாந்து அணி. நியூசீலாந்து அணியின் தொடக்க வீரர்களான குப்தில் மற்றும் முன்ரோ தனது முதல் பந்திலே தனது விக்கெட் இழந்து அணியின் நிலைமையை மோசமாக்கினர். இதன் பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் மற்றும் நிதானமாக விளையாடி அணியின் நிலைமையை உயர்த்த தொடங்கினர். இவர்கள் இருவரும் அரைசதத்தை நிறைவு செய்தனர். கெயில் வீசிய பந்தில் டெய்லர் 69 ரன்கள் அடித்து வெளியேறினார்.

Ross Taylor and Kane Williamson

இதன் பின் டாம் லாதம்-12, ஜேம்ஸ் நீஷாம்- 28, கொலின் டி கிராந்தோம்-16, மிட்செல் சாண்ட்னர்-10, மாட் ஹென்றி-0 ரன்கள் பெற்றனர். ஆனால் நியூசீலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 154 பந்துகள் பிடித்து 148 ரன்களை குவித்துள்ளார். 50 ஓவர்கள் முடிவில் 291 ரன்கள் குவித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 292 ரன்கள் பெற்றால் வெற்றி என்று களமிறங்கியது. தொடக்க வீரர்களான  கெயில் மற்றும் ஹோப் களமிறங்கினர். இதில் ஹோப் 1 ரன்னிலே விக்கெட் இழக்க பூரன் களமிறங்கினார். இவரும் 1 ரன்னிலே விக்கெட் இழந்தார். இதன் பின் கெயிலுடன் ஜோடி சேர்ந்த ஹெட்மியர் சிறப்பாக விளையாட தொடங்கினர். லோக்கி பெர்குசன் வீசிய பந்தில் ஹெட்மியர் 54 ரன்களில் வெளியேறினார்.

இதன் பின் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் தனது முதல் பந்திலே விக்கெட் இழக்க கார்லோஸ் பிராத்வைட் களமிறங்கி சதம் அடித்தார். கெயில் 84 ரன்கள் குவித்து வெளியேறினார். இதன் பின் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட் இழந்து அனைத்து விக்கெட்களைைையும் இழந்து 286 ரன்கள் குவித்தனர். நியூசீலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here