நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 2-1 என நியூசிலாந்து முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட இங்கிலாந்து அணிக்கு தாவித் மலன் – கேப்டன் மோர்கன் இருவரும் ஜோடி சேர்ந்து நியூசிலாந்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால் அணியின் ஸ்கொர் மளமளவென உயர்ந்தது. 19.4 ஓவரில் 240 ரன்னாக இருக்கும்போது மோர்கன் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 74 பந்தில் 182 ரன்கள் குவித்தது.

தாவித் மலன் 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது.

பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற  இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 16.5 ஓவர்களில் 165 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here