2019 உலகக் கோப்பை தொடர் கடந்த மே மாதம் 30ஆம் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் 45 லீக் போட்டிகளில் 30 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணி என்ற பட்டியல் ஒன்று வெளிவந்தது.

அதில் பாகிஸ்தான் அணிக்கு மொத்தம் 26 கேட்ச்களில் 14 கேட்ச்களை தவற விட்டுள்ளது. இது 35 சதவிகிதமாகும். இதையடுத்து இங்கிலாந்து அணி 42 கேட்ச்களில் 10 கேட்ச்களை தவறவிட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் பின் தென்னாப்பிரிக்கா, நியூசீலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்து இடத்தை பெற்று இருகிறது. இந்திய அணி 15 கேட்ச்களில் 1 கேட்ச் மட்டும் தவறவிட்டு கடைசி இடத்தை பெற்று இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here