இன்றைய 30வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முதலில் களமிறங்க முடிவு செய்தார்.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள்  இமாம் உல் அக் மற்றும் பாகர் ஜமான் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். இவர்கள் இருவரும் தலா 44 ரன்கள் அடித்து இம்ரான் தாகிரின் பந்தில் விக்கெட் இழந்தனர். இதன் பின் களமிறங்கிய பாபர் ஆசம் 69 மற்றும் அஃபீஸ் 20 ரன்களுடன் வெளியேறினார்கள். இதன் பின் மற்றும் ஹரிஸ் சோஹைல் மற்றும் இமாத் வாசிம் களமிறங்கினர். ஆனால் இமாத் விசிம் 23 ரன்னில் வெளியேறினார். இதன் பின் ரியாஸ் 4 ரன்னிலே வெளியேற சர்பராஜ் அஹ்மத் களமிறங்கினார். ஹரிஸ் சோஹைல் 89 ரன்களுடன் வெளியேறினார். இதன் பின்  சதாப் கான் களமிறங்கி 1 ரன் பெற்றார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 308 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி.

இறுதி ஓவரை வீசிய லுங்கி நெகிடி 2 விக்கெட்களை பெற்றார். இவர் இந்த போட்டியில் 3 விக்கெட்களை பெற்றார். இம்ரான் தாகிர் 2 விக்கெட்களை பெற்றிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here