பல சிக்கல்களை கடந்து, 10 வருடங்களுக்கு பின், பாகிஸ்தான்-இலங்கை போட்டி நாளை தொடங்கவுள்ளது. 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியானது, கராச்சியில் உள்ள நேஷனல் மைதானத்தில் இந்திய நேரப்படி, மாலை மூன்று மணிக்கு தொடங்கவுள்ளது.

மேலும் இந்தப் போட்டியில் பாதுகாப்பு கருதி டி-20 அணியின் கேப்டன் மலிங்கா, கேப்டன் மேத்யூஸ் பெரேரா ஆகிய 10 வீரர்கள் பங்கேற்க விரும்பவில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளனர். அத்துடன், லஹிரு திரிமணியா, துசான் ஷனகா தலைமையிலான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னரே 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது அப்போது அங்கே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சில வீரர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த முறை அப்படி நடக்க வாய்ப்பில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

விளையாடும் வீரர்களின் பட்டியல்:

பாகிஸ்தான் அணி: சர்பராஸ் அகமது (கேப்டன்), பாபர் அசாம், ஆபிட் அலி, ஆசிப் அலி, ஃபக்கர் ஜமான், ஹரிஸ் சோஹைல், முகமது ஹஸ்னைன், இப்திகார் அகமது, இமாத் வாசிம், இமாம்-உல்-ஹக், முகமது அமீர், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், சதாப் கான், உஸ்மான் கான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ்.

இலங்கை அணி: லஹிரு திரிமன்னே (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, சதீரா சமரவிக்ரமா, அவிஷ்கா பெர்னாண்டோ, ஓஷாதா பெர்னாண்டோ, ஷெஹன் ஜெயசூர்யா, தசுன் ஷானகா, மினோட் பானுகா, ஏஞ்சலோ பெரேரா, வாணிந்து ஹசரங்கா, லக்ஷன் சந்தகனா, நுவான் பிரதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here