இன்றைய உலகக்கோப்பையின் 33வது லீக் போட்டியில் நியூசீலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்ச்பஸ்டன் மைதானத்தில்  நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

முதலில் களமிறங்கிய நியூசீலாந்து அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குப்தில் 4, முன்ரோ 12, வில்லியம்சன் 41, ரோஸ் டெய்லர் 3, லதாம் 1 ரன்னில் வெளியேறினர். இதன் பின் களமிறங்கிய கொலின் டி கிராந்தோம் 64 ரன்கள் மற்றும் நிஷாம் 97 ரன்கள் குவித்தனர். 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் பெற்றனர்.

Jimmy Neesham and Colin de Grandhomme

238 ரன்கள் பெற்றால் வெற்றி என்று களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல அக் 19 ரன்னிலும் ஃபக்கர் ஜமான் 9 ரன்னிலும் வெளியற பாபர் ஆசாம் மற்றும் முகமது ஹபீஸ் களமிறங்கினர். இவர்கள் இவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். ஆப்போது வில்லியம்சன் வீசிய பந்தில் முகமது ஹபீஸ் 32 ரன்களுடன் வெளியேறினார்.

இதன் பின் களமிறங்கிய ஹரிஸ் சோஹைல் பாபர் ஆசாம் உடன் ஜோடி சேர்ந்தனர். இந்த பாட்னர்சிப்பில் பாபர் ஆசாம் சதம் மற்றும் சோஹைல் அரைசதமும் அடித்தனர். 48.3 ஓவரில் சோஹைல் ரன் அவுட்டாகி 68 ரன்னில் வெளியேறினார். இதன் பின் பாகிஸ்தான் அணி கேப்டன் களமிறங்கி 3 பந்துகளில் 5 ரன்கள் பெற்றார். பாபர் ஆசாம் 101 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here