Pakistan won their match in this world cup

இன்றைய 30வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முதலில் களமிறங்க முடிவு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 308 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி. இதில் ஹரிஸ் சோஹைல் 89 ரன்கள் அடித்தே அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. இதையடுத்து பாபர் ஆசம் 69 ரன்கள் அடித்துள்ளார்.

309 ரன்கள் அடித்தால் வெற்றி என்று களமிறங்கியது தென்னாப்பிரிக்கா அணி. முதலில் களமிறங்கிய அம்லா 2 ரன்னிலே வெளியேறினார். இதன் பின் களமிறங்கிய டு பிளெசிஸ் உடன் ஜோடி சேர்ந்த டி காக் சிறப்பாக விளையாட தொடங்கினர். டி காக் 47 ரன்னிலும் டு பிளெசிஸ் 63 ரன்னிலும் வெளியேறினர். இதன் பின் களமிறங்கிய அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை  வெளிப்படுத்தி தொடர்ந்து விக்கெட் இழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 259 ரன்கள் மட்டும் பெற்று தோல்வியை அடைந்தனர்.

பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர் வாஹாப் ரியாஸ் மற்றும் சதாப் கான் தலா 3 விக்கெட்களை பெற்றிருந்தனர். தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி நெகிடி 3 விக்கெட்களை பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here