2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு, மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று டி20 போட்டிகளில் ஆடி வந்தது இலங்கை அணி. மேலும் 2 ஒருநாள் போட்டிகளை ஆட மறுத்து மீண்டும் நாடு திரும்பியது. இதற்கு பாகிஸ்தான் நிர்வாகம் “மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது” என கூறியது.

இதற்கு பதிலளித்த இலங்கை கிரிக்கெட் வாரியம், “பாகிஸ்தான் நாட்டில் ஆடிய இலங்கை வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் சிக்கிய விலங்குகள் போல இருந்தனர். மேலும் எவ்வளவு நேரம் அவர்கள் ஹோட்டலுக்குள்ளேயே இறுக்கமான சூழலில் அடைந்து இருக்க முடியும். அதனால், வீரர்கள் மிகவும் சோர்வடைந்து விட்டார்கள்” என தெரிவித்தது.

மேலும் சில போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் நடத்த பாகிஸ்தான் வாரியம் முடிவு செய்தது. அதற்கு ஆகும் செலவில் பாதியை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்க வேண்டும் எனவும் கோரிக்கை செய்து வருகிறது.

பாகிஸ்தானின் இந்த செயலால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கடும் கோபமடைந்து உள்ளது என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here