2019 உலகக்கோப்பை தொடர் மே 30 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேலிஸில் சறிப்பாக நடைப்பெற்று வருகிறது. 45 லீக் போட்டிகளில் 33 லீக் முடிவடைந்துள்ளது. இதில் இந்திய, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நான்காவது இடத்திற்கு இங்கிலாந்து, பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகள் மோதிவருகின்றன.

இந்நிலையில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிவதாக தகவல் வெளிவந்துள்ளது. இரு அணிகளும் நீல நிறங்களுடன் விளையாடும் போது சந்தேகம் ஏற்படும் என்பதற்காக இந்த முடிவை மேற்கொண்டது ஐசிசி. இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு உடன் காத்துள்ளனர்.ஆனால் தற்போது இந்திய அணியின் ஜெர்ஸியிலும் அரசியலை கொண்டு வந்துள்ளனர்.

India wear orange jerry againsg england

பிரதமர் நரேந்திர மோடி எல்லாவற்றிற்கும் காவி நிறம் அடிக்க பார்க்கிறார் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் மற்றும் எம்.எல்.ஏ அபு ஆஸ்மி குற்றம் சாட்டியுள்ளார். இவர் இந்திய கொடியின் மூவர்ண நிறத்தை தேர்வு செய்தது ஓர் முஸ்மிம் தலைவர் ஆவார். ஆனால் தற்போது மோடி காவி நிறமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார் அபு ஆஸ்மி. இதற்கு பல தரப்பு கட்சி தலைவர்கள் ஆதர்வு  மற்றும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here