ஊக்க மருந்து உட்கொண்டது காரணத்திற்காக 8 மாத காலம் தடை விதிக்கப்பட்ட பிரித்திவி ஷா மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியிருக்கிறார்.

சையத் முஷ்டக் அலி டி20 டிராபியில் மும்பை அணிக்காக ஆடிய இவர், அசாம் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இவரது இந்த ஆட்டம் அணியின் வெற்றிக்கு உதவியது.

இது குறித்து பேசிய ஷா, இந்த இடைப்பட்ட காலத்தில் என்னை மனதளவிலும் கிரிக்கெட் அளவிலும் தேற்றுவதற்கு உதவியது ராகுல் டிராவிட் சார் தான். அவருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப விரும்புகிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here