புரோ கபடி ஏழாவது சீசன் தற்போது முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் யூபி யோதா மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் முதல் வெளியேற்ற போட்டியில் மோதின. இதில் 48-45 என்ற கணக்கில் பெங்களூரு அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இரண்டாவது வெளியேற்ற போட்டியில் மும்பை மற்றும் ஹரியானா இரு அணிகளும் மோதின. இதில் மும்பை 46-38 என முன்னிலை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில் நாளை நடைபெறவிருக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி இரு அணிகளும் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மும்பை மற்றும் பெங்கால் இரு அணிகளும் மோதுகின்றன.

முதல் போட்டி மாலை 7.30 மணி அளவில் நடைபெறும். இரண்டாவது போட்டி 8.30 மணி அளவில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here