தென்ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதேபோல இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அகர்வால் சதம் அடித்து அணியை நல்ல ரன் குவிக்க எடுத்துச்சென்றனர்.

அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்ததால் அகர்வாலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து இந்திய அணி வீரர் புஜாரா கூறுகையில், “மயங்க் அகர்வால் முதல்தர போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். பொதுவாக சதத்தை நெருங்கும்போது ஒவ்வொருவருக்கும் பதட்டம் இருக்கும். ஆனால் முதல்தர போட்டிகளில் நிறைய பழக்கம் ஏற்பட்டு விட்டதால், அகர்வாலிடம் அது போன்ற எந்தவித பதட்டமும் தெரியவில்லை. இதனால் அவர் மென்மேலும் பல சதங்கள் அடிப்பார்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here