ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானான ரிக்கி பாண்டிங் ஸ்டீவ் ஸ்மித்திற்க்கு ஆதரவாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், 2018 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக ஓராண்டுகாலம் தடை செய்யப்பட்டார். இவரது கேப்டன் பொறுப்பும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில் தடைக்காலம் முடிந்து மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித், ஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தார். இதனால் இவருக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டுமென விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் டிம் பெயின். ஆனால் அவர் அணியை வழி நடத்தும் விதம் அனைவருக்கும் திருப்தி அளிக்கவில்லை. அதனால் நல்ல நிலையில் ஆடிவரும் ஸ்டீவ் ஸ்மித்க்கு மீண்டும் கேப்டன் பொறுப்பை கொடுக்க அணி நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here