இந்திய அணிக்காக புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா இந்தியா வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது இப்படி போட்டியில் கலந்துகொண்ட ரோகித் சர்மாவிற்கு இது நூறாவது டி20 போட்டி ஆகும்.
ஆடவர் அணியில் இதனை செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுகிறார்.
இந்திய அணிக்காக, முதல் முறையாக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய டெஸ்ட் வீரர் கவாஸ்கர் ஆவார். அதேபோல் முதல்முறையாக 100 ஒருநாள் போட்டிகள் ஆடிய வீரர் என்ற பெருமை கபில்தேவ்-ற்கு செல்லும்.
தற்போது 100 டி20 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுகிறார். கவாஸ்கர், கபில்தேவ் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் ரோகித் சர்மா இணைந்திருக்கிறார்