உலகக்கோப்பை தொடரில் தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் மேற்குஇந்தியத்தீவுகள்-இந்தியா எதிரான ஆட்டத்தில் ரோஹித் ஷர்மாக்கு அவுட் குடுக்கபட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இன்று நடைபெறும் 34-ஆவது போட்டியில் இந்தியா மற்றும் மேற்கு இந்திய  தீவுகள் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி மென்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார்.

இதில் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் களமிறங்கினார். முதலிருந்து இருவரும் பொறுமையாக ஆடி வந்தனர். இந்நிலையில் 18 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா எல்பிடபில்யூ (LBW) ஆகினார். அதை அம்பயர் நாட் அவுட் என கூறினார்.

அதற்க்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ரெவியூ கேட்டனர். அதில் மூன்றாம் நடுவர் அவுட் என அறிவித்தார். அனால் பந்து பெட்டில் பட்டதால் பேடில் பட்டது தெளிவாக தெரியவில்லை. நடுவரின் இந்த முடிவு குறித்து ரசிகர்கள் எரிச்சலாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here