கடந்த 34வது லீக் போட்டியில் இந்திய அணியும் வெஸ்ட் இணி அணியும் மோதியது. இந்த போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 268 ரன்கள் குவித்தது. இதன் பின் களமிறங்கிய வெஸ்ட் அணி 34.2 ஓவரில்143 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா கீமர் ரோச் பந்தில் சிக்சர் அடித்தார், அதே ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்டார். இதை பிடித்த விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், அவுட் கேட்க மூன்றாவது நடுவரால் அவுட் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின் ரோகித் சர்மாவின் அவுட் அவுட்டில்லை என்பது தெரியவந்தது. இதனால் ரோகித் ரசிகர்கள் நடுவர்கள் திட்ட தொடங்கினர். நடுவரின் தவறான முடிவுகள் நடப்பு உலகக்கோப்பையில் இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறித்துக்கொண்ட ரோகித் சர்மா தனது ட்விட்டரில் நியாயம் கேட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here