2019 உலகக்கோப்பை தொடர் மே 30 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 45 லீக் போட்டியில் 32 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசீலாந்து ஆகிய அணிகள் தற்போதே அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் நீண்ட காலமாக இடது முழங்காலில் காயத்துடன் போராடி வந்தார். இருப்பினும் அவர் உலகக்கோப்பை தெடரில் விளையாடி வந்தார். ஆனால் தற்போது காயம் அதிகரித்துள்ளதால் இவர் உலக்க கோப்பையிலிருந்து வெளியேறினார்.

மேலும் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதிலாக,  26 வயதான சுனில் ஆம்ப்ரிஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here