ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சீனாவை சேர்ந்த காய் யான் யானை எதிர்கொண்டார்.

முதல் செட்டில் சாய்னா நேவாலை பதில் தாக்குதல் செய்ய விடாமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி சீன வீராங்கனை 21-13 என எளிதாக தோற்கடித்தார்.

பின்னர் இரண்டாவது சுற்றில் சுதாரித்துக்கொண்ட சாய்னா நேவால், இறுதிவரை போராடியும் பலன் இல்லாமல் 20-22 என வீழ்ந்தார்.

முதல் சுற்றில் தோல்வியடைந்தத சாய்னா நேவால் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதற்கு முன்னதாக நடந்த டென்மார்க் ஓபன் மற்றும் சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் முதல் சுற்றில் சாய்னா நேவால் வெளியேறினார். தற்போதும் முதல் சுற்றிலேயே வெளியேறியதால், இவர் மீது ரசிகர்கள் மிகவும் கடுப்பில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here