பிரபல கிரிக்கெட் வீரரின் மகனை மணக்க இருக்கிறார் சானியா மிர்சாவின் தங்கை ஆனம் மிர்சா.

டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் தங்கை ஆனம் மிர்சா ஃபேஷன் ஸ்டைலிஸ்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரும் பிரபல கிரிக்கெட் வீரரின் மகனும் காதலிப்பதாகவும், அவரை விரைவில் மணக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

சனிய மிர்சா பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்துகொண்டது போல, இவரும் ஒரு பாகிஸ்தான் வீரர்களை தான் திருமணம் செய்யவிருக்கிறார் என வதந்திகள் பரவி வந்தன.

இதனை உடனடியாக நிறுத்துவதற்காக, தனது தங்கை மற்றும் அவரது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தெரிவித்தார் சானியா மிர்சா. அவர் வேறு யாருமில்லை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் மகன் ஆசாத் ஆகும். இவர்கள் இருவருக்கும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.

ஆசாத் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here