உலகக்கோப்பையின் 12வது சீசன் தற்போது சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பத்து அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இதில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பையை வெல்வது ஒன்று மட்டும் நோக்கமாக வைத்து செயல்படுகின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலியா, நியூசீலாந்து, இந்தியா அணிகள் தொடர் வெற்றிகளை பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகள் 3 போட்டியில் தோல்வியை தழுவி அரையிறுதிக்கு போராடி வருகின்றனர். இதில் பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 3 மூன்று போட்டிகளில் வெற்றி 3 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டி ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இவர்களின் வெற்றி, தோல்வி, ரத்து என்ற வரிசை தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 1992 ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இம்ரான் கானின் வரிசைையும் நடப்பு வரிசையும் ஒன்றுப் போல் உள்ளது. எனவே இம்ரான் கான் போல் சர்பராஜ் ம் உலகக் கோப்பை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here